Published : 07 Aug 2024 11:09 PM
Last Updated : 07 Aug 2024 11:09 PM
சென்னை: தங்கள் நிறுவனம் பெயரில் நடிகர்கள் தேர்வு குறித்த போலி விளம்பரங்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லைகா நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: “லைகா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பல அதிகாரபூர்வமற்ற நடிகர் தேர்வுக்கான விளம்பரங்கள் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்கள் எங்களின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எங்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்களை புறக்கணிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்களை நடத்தும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் அல்லது ஏஜென்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்பதை நினைவில் கொள்ளவும்” இவ்வாறு அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
Attention! The casting calls currently circulating under the name of Lyca Productions are fake. Please avoid responding to it. Always wait for official confirmation and announcements from us to ensure authenticity and avoid scams. Stay cautious! #LycaProductions pic.twitter.com/2xXpsDuDXA
— Lyca Productions (@LycaProductions) August 7, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT