Published : 05 Aug 2024 05:18 PM
Last Updated : 05 Aug 2024 05:18 PM

“வயநாடு மக்களை மீட்க உதவுவீர்” - விருது மேடையில் கலங்கிய மம்மூட்டி

ஹைதராபாத்: “இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. வயநாடு சம்பவம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது” என நடிகர் மம்மூட்டி 69ஆவது ஃபிலிம் ஃபேர் நிகழ்வில் கலக்கத்துடன் பேசினார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின் மேடையில் பேசிய மம்மூட்டி, “இது என்னுடைய 15-வது ஃபிலிம் ஃபேர் விருது. நான் இப்படத்தில் மலையாளம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் பேசும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்நேரத்தில் படக்குழுவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. வயநாடு சம்பவம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. வயநாட்டில் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பல உயிர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களை நினைத்து தான் வருத்தப்படுகிறேன். இந்த நேரத்தில் நான் அவர்களை நினைவில் கொள்கிறேன். நீங்கள் அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவ வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x