Published : 28 Jul 2024 12:18 PM
Last Updated : 28 Jul 2024 12:18 PM

‘தக் லைஃப்’ டப்பிங்கை தொடங்கினார் சிம்பு!

சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார் சிலம்பரசன். இதில் கமலின் மகனாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தி நடிகர் அலி ஃபஸல், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதற்கிடையே சிம்பு இந்தப் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x