Published : 07 Jul 2024 08:51 PM
Last Updated : 07 Jul 2024 08:51 PM

‘முயற்சிகள் தோற்பதில்லை’ - அஜித்தின் ‘விடாமுயற்சி’ புதிய போஸ்டர்கள் வைரல்!

சென்னை: அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது

நடிகர் அஜித்குமார், ‘துணிவு’ படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட்பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதை அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அந்த போஸ்டர் வடிவமைப்பு மிகவும் ‘சிம்பிளாக’ இருந்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘முயற்சிகள் தோற்பதில்லை’ என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒரு போஸ்டரில் அஜித் காரை ஓட்டியபடியும், இன்னொரு போஸ்டரில் கையில் ரைபிள் ரக துப்பாக்கியுடனும் இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x