Published : 02 Jul 2024 06:48 PM
Last Updated : 02 Jul 2024 06:48 PM

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ உலக அளவில் ரூ.100 கோடி வசூல்!

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி 18 நாட்களை கடந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படம் ரூ.100 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x