Published : 25 Jun 2024 10:51 AM
Last Updated : 25 Jun 2024 10:51 AM

அதர்வாவின் ‘டிஎன்ஏ’ மெடிக்கல் கிரைம் த்ரில்லரா?

‘ஒரு நாள் கூத்து', ‘மான்ஸ்டர்', ‘ஃபர்ஹானா' படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். இவர் அடுத்து இயக்கும் படம், 'டிஎன்ஏ'. அதர்வா முரளி நாயகனாக நடித்துள்ளார். நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் கதை, மெடிக்கல் கிரைம் த்ரில்லர் பின்னணியில் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x