“தவறான தகவல்” - ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை குறித்து அமிதாப் பச்சன் விளக்கம்

“தவறான தகவல்” - ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை குறித்து அமிதாப் பச்சன் விளக்கம்

Published on

மும்பை: தனக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்(ஐ.எஸ்.பி.எல்) 10 ஓவர்கள் கொண்ட உள்ளூர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், மஜ்ஹி மும்பை அணியும், டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணியும் பலப்பரிட்சை நடத்தின. அதில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனுடன் மைதானத்துக்கு வந்திருந்தார். அமிதாப் பச்சனுடன், சச்சின் பேசிக்கொண்டிருக்கும்படியான புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானதே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமிதாப், “அது தவறான தகவல்” என சொல்லிவிட்டு சிரித்தபடியே கிளம்பிச் சென்றார். இதன் மூலம் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை குறித்த தகவலை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in