Published : 15 Feb 2024 11:00 AM
Last Updated : 15 Feb 2024 11:00 AM

’பர்த்மார்க்’ படத்தில் என்ன கதை?

சென்னை: ‘டான்ஸிங் ரோஸ்' ஷபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ள படம், 'பர்த்மார்க்'. ஸ்ரீராம் சிவராமன் தயாரித்துள்ள இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதர் கூறியதாவது:


இயற்கை முறை பிரசவம் பற்றி பேசும்படம் இது. அறுவைசிகிச்சை இல்லாமல் இயற்கையான பிரசவத்துக்கு இந்தியாவில் சில கிராமங்கள் பெயர் பெற்றதாக இருக்கின்றன. அதன் பின்னணியில் கற்பனையான கதையாக இதை உருவாக்கி இருக்கிறோம். 90-களில் நடக்கும் கதைக் களத்தைக் கொண்ட இதன் படப்பிடிப்பை, தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள மறையூர்பகுதியில் நடத்தியுள்ளோம். கார்கில் போருக்குப் பிறகு தாயகம் திரும்பும் டேனியல் என்ற ராணுவ வீரராக ஷபீர் நடித்திருக்கிறார். அவர் மனைவி ஜெனிஃபராக மிர்ணா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருந்தார். இந்த படம் வரும் 23-ம் தேதி தமிழ், மலையாளம் உட்பட 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது., வழக்கமான படமாக இல்லாமல் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். இவ்வாறு விக்ரம் ஸ்ரீதர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x