Published : 14 Feb 2024 09:40 AM
Last Updated : 14 Feb 2024 09:40 AM
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா , ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடப்பாவில் நடைபெற்றது.
80 சதவிகித காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment