Published : 08 Feb 2024 07:17 AM
Last Updated : 08 Feb 2024 07:17 AM
சென்னை: ரஜினிகாந்த் நடித்த ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71.
இயக்குநர் விசுவின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தவர் விஜய் ஆனந்த்.விசு இயக்கி 1984-ம் ஆண்டு வெளியான ‘நாணயம் இல்லாத நாணயம்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். தொடர்ந்து, காவலன் அவன் கோவலன், ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள், ரஜினிகாந்த் நடித்த, ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார்.
‘நான் அடிமை இல்லை’ படத்தில் இடம் பெற்ற ’ஒரு ஜீவன் தான்...’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான இவர், தமிழில் சுமார் 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கன்னடத்தில் 180 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜய் ஆனந்த் நேற்று முன் தினம் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு பெருங்களத்தூரில் நேற்று நடந்தது.
மறைந்த விஜய் ஆனந்துக்கு அமலி என்ற மனைவி ஜெனிபர் என்ற மகள் உள்ளனர். விஜய் ஆனந்த் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment