Published : 04 Feb 2024 06:10 AM
Last Updated : 04 Feb 2024 06:10 AM
சென்னை: இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி சமீபத்தில் புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் 'புயலில் ஒரு தோணி'. பி.ஜி.பிக்சர்ஸ் சார்பில் ரோமிலா நல்லய்யா தயாரித்துள்ள இதில் புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் நடித்துள்ளனர்.
படத்தை இயக்கியுள்ள ஈசன் கூறும்போது, "இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. பெண் சுதந்திரம் என்று பேசினாலும் இன்னும் அவர்கள் பல்வேறு விஷயங்களுக்குப் போராடத்தான் வேண்டியிருக்கிறது. அதை இந்தப் படம் சொல்லும். ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் கதைக்கும் இதுக்கும் தொடர்பில்லை. அந்த தலைப்பை மட்டும் பயன்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்துக்கு பவதாரிணிதான் இசை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். முழுபடத்தையும் முடித்துவிட்டு அவருக்குத் திரையிட்டு காண்பித்தேன். படத்தில் 2 பாடல்கள். அதை விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சரியப் படுத்தினார். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். கார்த்திக்ராஜா இன்னொரு பாடலை பாடியுள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT