Published : 14 Jan 2024 05:00 PM
Last Updated : 14 Jan 2024 05:00 PM

விஜய்யின் ‘The GOAT’ படப்பிடிப்பு தள டைரீஸ்: வீடியோவை வெளியிட்ட படக்குழு 

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் ரசிகர்களை சந்தித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x