Published : 13 Dec 2023 03:52 PM
Last Updated : 13 Dec 2023 03:52 PM
Sister & Sister | Dir: Kattia G.Zuniga | Panama, Chile | 2023 | 80' | WC - Serene | 11.40 AM: இரண்டு டீன்ஏஜ் சகோதரிகள் காணாமல் போன தங்கள் தந்தையைத் தேடிச் செல்கிறார்கள். அது ஒரு கோடை விடுமுறை என்பதால் அவர்கள் மனதில் கொண்டாட்ட உணர்வும் மெல்ல மேலோங்கத் தொடங்குகிறது. கோஸ்டாரிகாவில் இருந்து பனாமாவிற்கு செல்லும் மெரினா மற்றும் லூனா ஆகிய அந்த இருவருக்கிடையே உரசல்களும் எழுகிறது. என்றாலும் அதனை லாவகமாக கையாள்கிறார்கள். தந்தையை தேடும் பணிகளுக்கிடையே கொண்டாட்டத்திற்கான ஆசைகளும் தலையெடுக்கிறது. பயணத்தில் புதிய நட்புகள், காதலர்கள் எனவும் அவர்கள் பாதை திசை மாறுகிறது. கிட்டத்தட்ட தந்தையை தேடும் வேலையை மறந்தே போகிறார்கள்... நிறைய நண்பர்களுடன் விளையாடத் தொடங்குகிறார்கள்.
சுதந்திரமாக இருப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. நகர்ப்புற வாழ்க்கையில் வண்ணமயமான டீனேஜ் வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரத்தின் எல்லையை ஆழமா இப்படம் சித்தரிக்கிறது. பல்வேறு முக்கியமான உலகத் திரைவிழாக்களில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளது இத்திரைப்படம்.
Midwives | Dir: Lea Fehner | France | 2023 | 100' | WC - Serene | 3.30 PM: முழுக்க முழுக்க மருத்துவமனையிலேயே படமாக்கட்ட திரைப்படம். நர்ஸ் பணியில் 5 வருடங்கள் பயிற்சி பெற்ற பின் அதில் தேர்ச்சி பெற்ற சோபியா லூயிஸ் ஆகியோரைப் பற்றிய கதை. மிகக் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு மருத்துவமனையில் இருவரும் வேலைக்கு சேர்கிறார்கள். அவர்கள் மருத்துவத் துறையில் பெறும் புதிய அனுபவங்கள் எவ்வளவு சவாலானது என்பதை போகக்போக உணர்கிறார்கள்.
மகப்பேறு மருத்தவ சிகிச்சைகள் மிகவும் கடினமாக அமைகிறது. அந்த அனுபவங்கள் அவர்கள் எந்தப் பணியை தங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார்களோ அதைப்பற்றியே உறுதியையே குலைப்பதாக உள்ளது. சேவைப் பணி என்பது எவ்வளவு உணர்வுபூர்வமான போராட்டம் என்பதை இத்திரைப்படம் பேசுகிறது.
Foremost by Night | Dir: Victor Iriarte | Spain, Portugal,France | 2023 | 80' | WC - Anna | 4.45 PM:
வேரா என்ற நடுத்தர வயதுப்பெண் பெற்ற மகனை தேடும் இப்படத்தின் கதை வெவ்வேறு சமூகப் பின்னல்களின் பாதைகளாக விரிகிறது. பாச போராட்டத்தை நிகழ்த்தும் தாயின் வாயிலாக குழந்தைகள் திருடப்படும் பிரச்சினைகளையும் இப்படம் ஆராய்கிறது. குழந்தையைப் பெற்றெடுத்த காலத்தில் மகனை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்று குழந்தை காப்பகத்தில் அளிந்திருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அத் தாய் உணரும் தருணங்கள் ஏராளம். இப்போது போய் கேட்டால் தங்கள் குழந்தையை அளித்தது பற்றிய கோப்புகள் எதுவும் எங்களிடம் இல்லை. நீங்கள் கேட்கும் குழந்தையைப் பற்றியும் எங்களுக்குத் தெரியாது என்று கையைவிரித்துவிட வேரா தனது சொந்த முயற்சியிலேயே தனது மகனைத் தேடிச் செல்லத் தொடங்குகிறாள்.
உண்மையில் அவளது மகனுக்கு தற்போது 18 வயது. அவன் பெயர் எகோஸ். ஒரு பியானோ டீச்சரிடம் வளர்ந்துகொண்டிருக்கிறான். பியானோ டீச்சருக்கு தனது வளர்ப்பு மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்றே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவள். இந்நிலையில் பியானோ டீச்சரிடம் வேரா சென்று தனது மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டாளா, மகன் மீண்டும் கிடைத்தானா அவனது விருப்பம் என்ன? பெற்ற தாயிடமே சென்றுவிடலாமா வேண்டாமா? போன்ற பலவும் ஒன்றையொன்று மோதுகின்றன. திரைப்பட வரலாற்றில் நியோ நாய்ர் என்றொரு வகைமை உண்டு. அத்தகைய பாணியில் எடுக்கப்பட்ட படம் இது. ஒரு மெலோட்ராமாவாகவும் அமைந்துள்ள 'ஃபார்மோஸ்ட் பை நைட்' திரைப்படத்தை ஸ்பானிஷ்-போர்த்துகீசியம்-பிரெஞ்சு ஆகிய சர்வதேச நாடுகள் இணைந்து தயாரித்துள்ளன.
Perfect Days | Dir: Wim Wenders |Japan, Germany | 2023 | 123' | WC - Sathyam | 6.00 PM: ஜப்பான் மற்றும் ஜெர்மனி கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம். ஹிராயமா என்ற நடுத்தர வயது மனிதர் டோக்கியோவில் டாய்லெட் கிளீனராக பணிபுரிகிறார். தன்னுடைய வேலையிலோ இப்போதுள்ள தனது வாழ்க்கை நிலையிலோ எந்த புகாரும் அவருக்கு இல்லை. தன்னுடைய எளிய வாழ்க்கை ஒருவகையில் அவருக்கு பிடித்திருக்கிறது என்கிற வகையில்தான் அவரது அன்றாட பணிகளில் அவர் காட்டும் ஈடுபாடு வெளிப்படுகிறது.
ஓய்வு நேரங்களில் புத்தகம், இசை, புகைப்படம் எடுப்பது என நகரும் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத சந்திப்புகளின் மூலம் அவரது கடந்த காலத்தின் பல பகுதிகள் படிப்படியாக வெளிப்படுகின்றன. நான்கு சிறுகதைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று மாறியுள்ள புதிய டோக்கியோ மாநகரின் அழகுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT