Published : 11 Dec 2023 06:28 AM
Last Updated : 11 Dec 2023 06:28 AM

துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு எப்போது?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘துப்பறிவாளன்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பின்னர் ‘துப்பறிவாளன் 2’ படத்தை தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ படத்தில் நடித்து வரும் விஷால், ‘துப்பறிவாளன் 2’ படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x