Published : 30 Oct 2023 12:30 PM
Last Updated : 30 Oct 2023 12:30 PM
சென்னை: “எனது மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய மனைவிக்கு 5 வருடமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முதுகில் தவறாக செய்த ஆப்ரேஷனின் விளைவாக அவரால் நடக்க முடியாது. படுத்த படுக்கையாக தான் இருந்தார். இந்த நிலைமையை விளக்கி நான் பேட்டி கொடுத்திருந்தேன். அதன் எதிரொலியாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வீட்டுக்கு வந்து நேரில் பார்த்தார்.
உடன் டாக்டர் பட்டாளத்தையே அழைத்து வந்திருந்தார். என் மனைவியை பரிசோதித்து பார்த்தனர். பின்னர் சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம் என உறுதியளித்தனர். இந்த நேரத்தில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் எனது நன்றிகள். என்னுடைய மனைவி குணமாக வேண்டும் அது தான் எனக்கு முக்கியம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...