Published : 14 Oct 2023 02:20 PM
Last Updated : 14 Oct 2023 02:20 PM
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்ட்டின் டாரன்ட்டினோ தெற்கு இஸ்ரேல் பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்குச் சென்று அங்கு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7-வது நாளாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த தாக்குதலில் காசாவில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 500 பேர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 11 லட்சம் காஸா நகர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இந்தச் சூழலில், பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்ட்டின் டாரன்ட்டினோ தெற்கு இஸ்ரேல் பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்கு சென்று அங்கு வீரர்களை நேரில் சந்துத்துள்ளார். இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அவர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலைச் சேர்ந்த தன்னுடைய காதலியான டேனியல்லா பிக் மற்றும் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் டாரன்ட்டினோ கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல் அவிவ் நகரத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT