Published : 07 Oct 2023 05:08 AM
Last Updated : 07 Oct 2023 05:08 AM

தாய்லாந்து காடுகளில் ‘கங்குவா’ படப்பிடிப்பு

சென்னை: நடிகர் சூர்யா, சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். நட்டி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப்படம் 3டி முறையில் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. சென்னை, கொடைக்கானல் உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு இப்போது, தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காடுகளில் நடந்து வருகிறது. இதற்காக சூர்யா உட்பட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அங்கு படமாக்குகின்றனர். மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. நவம்பர் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x