Published : 10 Sep 2023 01:17 PM
Last Updated : 10 Sep 2023 01:17 PM
சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் உலக தற்கொலை தடுப்பு தினம் குறித்து பதிவிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன். தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.
‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கமல்ஹாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.
தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப்…
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம் (IASP) உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் மனநலத்திற்கான உலக கூட்டமைப்பு (WFMH) ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தில் தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT