Published : 07 Sep 2023 08:59 PM
Last Updated : 07 Sep 2023 08:59 PM

ரூ.16 கோடி மோசடி புகார்: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது

சென்னை: லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிகை செய்தி: சென்னையைச்‌ சேர்ந்த பாலாஜி ‌கபா என்பவர்‌ சென்னை காவல்‌ ஆணையாளரிடம்‌ கொடுத்த புகாரில்‌ கடந்த 2020ம்‌ ஆண்டு Libra Productions Pvt Ltd என்ற நிறுவனத்தைச்‌ சேர்ந்த ரவீந்தர் என்பவர்‌ அறிமுகம்‌ ஆகி நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல்‌ திட்டம்‌ ஆரம்பிக்க உள்ளதாகவும்‌, அந்த திட்டத்தின்‌ மதிப்பு ரூ.200 கோடி என்றும்‌, அதில்‌ முதலீடு செய்தால்‌ இரட்டிப்பு லாபம்‌ வரும்‌ என்று ஆசை வார்த்தைகள்‌ கூறி, மேற்படி திட்டம்‌ ஆரம்பிக்க போலியான ஆவணங்களை காண்பித்து தன்னை நம்பவைத்து ரூ.16 கோடி வரை முதலீடு செய்ய வைத்து, Power Project திட்டத்தை ஆரம்பிக்காமலும்‌, வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும்‌ ஏமாற்றி வருவதாகவும்‌ எனவே மோசடி செய்த ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின்‌ பேரில்‌ சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள்‌ மோசடி பிரிவில்‌ (15101) வழக்கு பதிவு செய்து புலன்‌ விசாரணை செய்தது.

புலன்‌ விசாரணையில்‌ Libra Productions Pvt Ltd நிறுவனத்தைச்‌ சேர்ந்த ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல்‌ திட்டம்‌ தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து அதனை உண்மை என நம்ப வைத்து பாலாஜி கபாவிடம்‌ ரூ.15,8,32,000/- பெற்றுக்‌ கொண்டு Power Project திட்டத்தை ஆரம்பிக்காமலும்‌, வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும்‌ ஏமாற்றியது புலன் விசாரணையில்‌ தெரிய வந்தது.

இவ்வழக்கில்‌ தொடர்புடைய ரவீந்தர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்‌ பேரில்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டார்‌ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x