Published : 18 Dec 2017 07:21 PM
Last Updated : 18 Dec 2017 07:21 PM
THE ART OF LOVING / SZTUKAKOCHANIA HISTORIA MICHALINY WISLOCKIE | DIR: MARIA SADWSKA | POLICH / GERMAN | 2017 | 108' கேஸினோ, பிற்பகல் 2.45 மணி
சோவியத் யூனியனில் போலந்து இருந்தபோது நடைபெறும் கதை இது. மிச்சாலினவிஸ்லோகா, மிகப் புகழ்பெற்ற பிரபல பாலியல் நிபுணர், போலந்து மக்களின் பாலியல் வாழ்க்கை என்றென்றும் மாற்றிவிடக்கூடிய தனது புத்தகத்தை வெளியிட உரிமைப் போராட்டம் நடத்திய வரலாற்றைப் பேசுகிறது தி ஆர்ட் ஆஃப் லவ்விங் திரைப்படம்.
THE MARRIAGE / MARTESA | DIR: BLERTA ZEQUIRI | ALBANIAN| 2017 | 69' தேவி, காலை 11.00 மணி
அனிதா மற்றும் பேகிம் இருவரின் திருமணமும் இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. அந்த முக்கியமான நிகழ்வுக்காக இறுதிகட்ட பணிகளில் இருவரும் மூழ்கியுள்ளனர். 1999ல் நடந்த கொசாவா போருக்குப் பின்னர் அனிதாவின் பெற்றோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட போதிலும், போகிமின் கட்டுப்பாட்டுமிக்க குடும்பம் என்பதால் பிரச்சனையை வருங்கால தம்பதிகள் இருவரும் முன்தயாரிப்புகளோடு எப்படியோ சமாளிக்கிறார்கள். ஆனால் பேகிமின் முன்னாள் ரகசிய காதலனான நோல் வெளிநாட்டிலிருந்து எதிர்பாராதவிதமாக திரும்புகிறான். இப்பொழுதும் நோல் இவனை காதலிப்பதை புரிந்துகொள்கிறான். பதற்றத்துடன் திருமண விருந்து ஆரம்பமாகிறது.
THE ASSASSIN/ CIKE NIEYINNIANG | DIR: HSIAO-HSIENHOU | MANDARIN | 2015 | 105' தேவி, மாலை 4.30 மணி
பெண்களை சாகசங்களை நோக்கி அழைத்துச்செல்லும் படம். 8 ஆம் நூற்றாண்டில் சீனாவில், 10 வயது ஜெனரலின் மகள் நையினியாங் ஒரு கன்னியாஸ்திரியிடம் ஒப்படைக்கப்பட்டார், அவர் தற்காப்புக் கலைகளில் ஈடுபடுத்தி அவரை வளர்க்கிறார். அந்தக் கலை நைனியாங்கை, கொடூரமான மற்றும் ஊழல்மிக்க உள்ளூர் ஆளுநர்களை அகற்றுவதற்காக ஒரு விதிவிலக்கான கொலையாளியாக மாற்றுகிறது. ஒரு நாள், ஒரு பணியில் தோல்வியடைந்த நிலையில், அவள் தன் தாயிடம் தன் பிறந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டாள் உடன் அவளுக்கு ஒரு உத்தரவும் இடப்பட்டிருந்தது. இப்போது வட சீனாவில் மிகப்பெரிய சுதந்திரமான இராணுவப் பகுதியை நடத்தும் ஒரு உறவினர் அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தவர், அவரைக் கொல்ல வேண்டும். நாட்டைவிட்டுவெளியேற்றப்பட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இளம்பெண் தனது பெற்றோரை சந்திக்க வேண்டும். அவளுடைய நினைவுகள் மற்றும் அவரது நீண்ட ஒடுக்கப்பட்ட உணர்வுகள் பொங்கிப் பெருகுகின்றன. தன் எஜமானியின் கட்டளையின் கீழ் உள்ள ஒரு அடிமை நையினியாங் இனி ஒன்று தனது காதலை தியாகம் செய்ய வேண்டும். அல்லது புனிதமான வழியில் சென்று நீதியை நிலைநாட்ட வேண்டும்.
A MAN OF INTEGRITY / LERD | DIR: MOHAMMAD RASOULOF | ENGLISH / PERSIAN | 2017 | 117' தேவி மாலை 7.00 மணி
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ரெஸா, ஓர் ஈரானியரான மைக்கேல் கால்ஹாஸ் என்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து காப்பாற்றும் பொருட்டு அவருக்காக நீதி கிடைக்கும் வரையில் கடைசிவரை சட்டப்பூர்வமாக நின்று போராட துணைநிற்கிறார். அவர் ஒரு முன்னாள் டெஹ்ரான் வாசி. அங்கு ஒரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பணியாற்றி வந்தவர். ஒரு தொழிற்சாலையில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போயிருந்ததை கண்டறிந்து அதற்காக போராடியவர். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் அங்கிருந்து நகர்ந்து அவர் ஈரானின் வடக்கில் நாட்டுப்புற பகுதியை நோக்கி வந்துள்ளவர். எதிர்பாராமல் அவரே ஒரு தங்கமீன்களின் பண்ணையை அங்கு நிறுவும் வாய்ப்புகிடைக்கிறது. பிறகு அவரே பெருமுதலாளியாக மாறி பணியாளர்களை ஒடுக்குபவராக மாறுகிறார். இப்படம் ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றுள்ளது.
THE NOTHING FACTORY / A FABRICA DE NADA | DIR: PEDRO PINHO | POLISH | 2017 | 132' கேஸினோ, பிற்பகல் 7.00 மணி
ஒரு இரவில், ஒரு தொழிலாளி ஒருவர் தமது தொழிற்சாலைகளிலிருந்து இயந்திரங்களை திருடிச்செல்ல ஏற்பாடு செய்திருப்பதை உணர்கிறார். அவை மிகப்பெரிய பணிநீக்கத்தின் முதல் சமிக்ஞை என்பதை அவர்கள் விரைவில் புரிந்துகொள்கிறார்கள். அவர்களில் பலர் தனி பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைக்கவில்லை. மாறாக தங்கள் பணியிடத்தையும் ஆக்கிரமிக்கின்றனர். அவர்களது எண்ணத்தை நிர்வாகம் உடைக்கிறது. அவர்கள் தொழிற்சாலை பாதி காலியான நிலையில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறுகிறார்கள். அவர்கள் சுற்றியுள்ள உலகம் வீழ்ச்சியுற்றதால், புதிய ஆசைகளும் வெளிப்படத் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT