Published : 05 Sep 2023 10:24 AM
Last Updated : 05 Sep 2023 10:24 AM

4 மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’!

தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.பி இணைந்து தயாரிக்கும் படம் 'சிகாடா'. இதை மலையாள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

பொதுவாக 4 மொழிகளில் தயாராகும் படத்துக்கு பாடல்கள் அனைத்தும் ஒரே ட்யூனில் அமைந்திருக்கும். இதில் 4 மொழிகளுக்கும் வெவ்வேறு ட்யூன்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 24 ட்யூன்கள் இயற்றி பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வைவல் திரில்லர் படமான இதில் ரஜித் , ஜாய்ஸ் ஜோஸ், காயத்ரி மயூரா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நவீன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x