Published : 01 Sep 2023 06:26 PM
Last Updated : 01 Sep 2023 06:26 PM

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் செப்.3-ல் ரிலீஸ்

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன்’. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்துக்காக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் முதல் பார்வை ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 3-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் அறிவிப்புக்காக வெளியிடபட்டுள்ள வீடியோவில் யுவன் சங்கர் ராஜவின் பின்னணி இசை ஈர்க்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி, ‘சைரன்’, ‘ஜெஆர்30’, ‘தனிஒருவன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x