Published : 30 Aug 2023 11:28 AM
Last Updated : 30 Aug 2023 11:28 AM
சென்னை: ஓடிடியில் வெளியாவதற்கு முன்பாகவே ‘ஜெயிலர்’ படம் ஹெச்டி தரத்தில் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுவரை உலக அளவில் இப்படம் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், படம் ஹெச்டி தரத்தில் இணையத்தில் கசிந்துள்ளது. இது படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் பலரும் தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் ஹெச்டி லிங்க்கை யாரும் பகிரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
I request fans to not share any form of HD content of #Jailer movie on social media and let people enjoy it in theatres as it is meant to be. Let's not support piracy at any cost.
— Rhevanth Charan (@rhevanth95) August 29, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT