குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவன்

குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவன்
Updated on
1 min read

சென்னை: கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று, ஓணம். இந்த ஆண்டு இந்தப் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த சில நாட்களாகத் திரைப்பிரபலங்கள் ஓணம் சேலை அணிந்தபடி புகைப்படங்களைப் பதிவு செய்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி, தங்கள் குழந்தைகள் உயிர், உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‘எங்களின் உயிர், உலகமுடன் ஓணம் பண்டிகை இங்கே தொடங்குகிறது. அனைவருக்கும் மகிழ்ச்சியான ஓணம் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in