Published : 23 Aug 2023 05:33 PM
Last Updated : 23 Aug 2023 05:33 PM

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட ‘ஐ லவ்யூ டி’ பாடல் வெளியீடு

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் 2வது சிங்கிள் பாடலான ‘ஐ லவ்யூ டி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் 2வது சிங்கிள் பாடலான ‘ஐ லவ்யூடி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். ரோகேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடலை எழுதியுள்ளனர். பாடலை பொறுத்தவரை காதல் தோல்வி பாடலாகவும், பெண்களுக்கு எதிரான வரிகளை உள்ளடக்கிய பாடலாகவும் உருவாகியுள்ளது.

பாடல் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x