Published : 23 Aug 2023 02:21 PM
Last Updated : 23 Aug 2023 02:21 PM

4 வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஃபேன்டஸி படத்தில் சூர்யா

சென்னை: தெலுங்கில் ‘கார்த்திகேயா 2’ படத்தை இயக்கிய சந்தூ மொண்டெட்டியின் இயக்கத்தில் சூர்யா ஒரு ஃபேன்டஸி படத்தில் நடிக்க உள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘கங்குவா’. இதில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்படப் பலர் நடிக்கின்றனர். பீரியட் படமான இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கில் ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தூ மொண்டெட்டியின் இயக்கத்தில் ஃபேன்டஸி படம் ஒன்றில் சூர்யா நடிக்க இருக்கிறார். இதனை சந்தூ மொண்டெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். இப்படம் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சூர்யா தற்போது ஒப்பந்தமாகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு இப்படத்துக்காக தேதிகளை ஒதுக்குவார் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x