Published : 21 Aug 2023 05:22 AM
Last Updated : 21 Aug 2023 05:22 AM

பாரதிய வித்யா பவனில் பவனோத்சவம் திருவிழா

சென்னை: ஓணம் பண்டிகையை ஒட்டி பவனோத்சவம் என்னும் ஐந்து நாள் கலை திருவிழாவை பாரதிய வித்யா பவன் நடத்துகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் கேரள கலைஞர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் இன்று (21-08-23) முதல் 25-ம் தேதிவரை ஐந்து நாட்கள் நடைபெறும். இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. 6.30 மணிக்கு கலாஷேத்ரா அறக்கட்டளையின் கதகளி நடைபெறும். நாளை (ஆக. 22) மாலை 6 மணிக்கு இளையடம் சகோதரர்கள் மற்றும் குழுவினரின் செண்டை மேளம், இரவு 7 மணிக்கு கலாநிகேதன் இசையில் ஒப்பனை நடனம், இரவு 7.30 மணிக்கு கலாமண்டலம் கவிதா கீதானந்தனின் ஒட்டன் துள்ளல் நடைபெறும். 23ம் தேதி மாலை 6 மணிக்கு பெரம்பூர் ஸ்ருதிலயாவின் திருவாதிரக்களி, 6.20 மணிக்கு கலாநிகேதனின் மார்கம்களி, 6.45 மணிக்கு அம்மு ஸ்டேஜ் விஷனின் கேரள நாட்டுப்புறப் பாடல்கள், 7.30 மணிக்கு ஸ்ருதி ஷோபியின் மோகினியாட்டம் நடைபெறும். 24ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலட்சுமியின் கூடியாட்டம், 7 மணிக்கு கோபிகா வர்மா குழுவினரின் மோகினியாட்டம் நடக்க இருக்கிறது. 25-ம் தேதி மாலை 6 மணிக்கு மக்தூப் தியேட்டர் வழங்கும் 'ஆசிரியர் தினம்' மலையாள நாடகம் நடைபெறும். அனுமதி இலவசம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x