Last Updated : 14 Dec, 2017 04:22 PM

 

Published : 14 Dec 2017 04:22 PM
Last Updated : 14 Dec 2017 04:22 PM

CIFF-ல் டிசம்பர் 15 அன்று என்ன படம் பார்க்கலாம்? - பாரதி ஆனந்த் பரிந்துரைகள்

THE TOWER / DER TURM | GERMAN | அண்ணா, பிற்பகல் 2.00 மணி

கிழக்கு ஜெர்மனி கம்யூனிஸ்ட் ஆட்சியின் இறுதி காலத்தில் நடக்கும் கதை. 1982. அடக்குமுறை அரசில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. அடக்குமுறைகளையும் மீறி படித்தவர்கள் சிலர், அதே அமைப்பில் கூடுதல் சலுகைகளை பெறுகிறார்கள். ஹாஃப்மேன் குடும்பத்தினர் அந்தஸ்து மிக்கவர்களுடன், அரசியல் வாதிகளுடன், இசை, கேளிக்கைகளுடன் விருந்துக்காக அடிக்கடி கூடுகின்றனர். ரிச்சர்ட் தனக்கென பல கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் அவன் தனது இரண்டாவது வாழ்க்கையை பற்றி ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறான். ரகசிய போலீஸ் நிழலாக பின் தொடர, எடுக்கப்படும் முடிவுகளால் வரும் விளைவுகள் பேரழிவுக்கு வித்திடுமா என்ற பயமும், நம்பிக்கையின்மையும் அதிகரிக்கும் சூழல்,

main content - GOLDEN YEARS100 

GOLDEN YEARS / NOSANNEESFOLLES | FRANCE | கேஸினோ, மாலை 7.00 மணி

முதல் உலகப்போரிலிருந்து தப்பி வந்த வீரன் பாலின் உண்மைக் கதை இது. அவனது அடையாளத்தை மறைக்க, அவனது மனைவி லூயி, பாலுக்கு பெண் வேடமிடுகிறாள். பாரிஸில் சூஸேனாக நடமாடுகிறான் பால். போர் முடிந்ததும், சூஸன் மீண்டும் பால் என்ற அடையாளத்தை பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

main content - RADIANCE100 

RADIANCE / HIKARI | JAPANESE | தேவிபாலா, பிற்பகல் 2.15 மணி

பார்வை குறைபாடு மிக்க மிசேகோ, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒரு திரையிடல் தருணத்தில் மெதுவாக பார்வை இழந்துவரும் பழைய புகைப்படக் கலைஞரான நகமோரியை சந்திக்கிறார். மிசோகோ விரைவில் நகமோரியின் புகைப்படங்களை தேடிக் கண்டுபிடிக்கிறார். இதனால் அவர் தனது கடந்த காலத்திற்கு திரும்புகிறார். அவள் கண்களுக்கு இதுவரை தெரியாமல் இருந்த பிரகாசமான உலகத்தை அவரோடு இணைந்து முதன்முதலாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

main content - THE DRESSMAKER100 

THE DRESSMAKER / DIE SCHNEIDERIN | AUSTRALIA | தேவிபாலா, மாலை 4.45 மணி

ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது சிறிய கிராமத்துக்கு திரும்புகிறாள் கவர்ச்சிகரமான பெண்ணொருத்தி. அங்கு, தனது தையல் இயந்திரத்தின் உதவியுடனும், உயர்தர ஃபேஷன் ரசனையுடனும், அந்த கிராமத்து பெண்களை மொத்தமாக மாற்றுகிறாள். அதோடு, தனக்கு தீங்கிழைத்தவர்களை பழியும் தீர்த்துக்கொள்கிறாள்

main content - CORPORATE100 

CORPORATE | DIR: Nicolas Silhol| FRANCE / தேவி, பிற்பகல் 2.00 மணி

எமிலி, எசென் என்ற பன்னாட்டு நிறுவனமொன்றில் மனித வள பிரிவில் வேலை பார்க்கிறாள். அவளது நேர்த்தியான அதேசமயம் இரக்கமற்ற அணுகுமுறையின் காரணமாக, அவளது உயரதிகாரி ஸ்டீஃபனால் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவள். தேவைப்படாத பணியாளர்களை தாமாகவே பணியிலிருந்து வெளியேற செய்யும் திறன் அவளுக்கிருந்தது. எந்த தார்மீக சிந்தனையும் இன்றி இதை செய்து வருகிறாள். அப்படி ஒரு நாள் வேலையில், டல்மாட் என்பவர் அலுவலகத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது எமிலியை கடுமையாக பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த பன்னாட்டு நிறுவனம், அவள் மீதே மொத்த பழியையும் சுமத்தி விட நினைக்கிறது.

main content - nodatenosignature100 

NO DATE NO SIGNATURE / NO DATE, NO SIGN | PERSIAN | தாகூர் திரைப்பட மையம், மாலை 7.15 மணி

தடயவியல் நிபுணர் டாக்டர். நரிமான் ஒரு கார் விபத்தில் சிக்குகிறார். அதில் எதிரில் மோட்டர் சைக்கிளில் வந்தவரின் 8 வயது மகனுக்கும் அடிபடுகிறது. அவனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கேட்டாலும், அவன் தந்தை மறுக்கிறார். அடுத்தநாள், அந்த சிறுவன் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவரது மருத்துவமனையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த சிறுவனின் மரணத்துக்கு யார்காரணம். குழந்தை இறந்த சோகத்தில் நரிமானை சந்தேகப்படுவதுடன் அவரை கேவலமாகப் பேசுகிறார் பெற்ற தந்தை. ஆனால் நடந்ததே வேறு. மற்ற டாக்டர்கள் டயக்னிசிஸ் செய்யும்போது நடந்த தவறுதான் அவன் இறக்கக் காரணம் என்பது தாமதமாக தெரியவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x