Published : 17 Aug 2023 05:05 AM
Last Updated : 17 Aug 2023 05:05 AM
மும்பை: உக்ரைன் நாட்டின் புகழ் பெற்ற இசைக்குழு, சாந்தி பீப்பிள் (Shanti People). சைவ உணவு பழக்கத்தை கொண்டுள்ள இந்த இசைக்குழுவினர் இந்து மத வேத மந்திரங்களுடன் மின்னணு இசையை கலந்து வழங்குபவர்கள். இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் முன்னணி பாடகி உமா சாந்தி.
இந்தக் குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறது. பெங்களூரு மற்றும் போபாலில் இசை நிகழ்ச்சி நடத்திய இவர்கள், சமீபத்தில் புனேவில் இசை நிகழ்ச்சி நடத்தினர். பாடகி உமா சாந்தி இரண்டு கைகளிலும் இந்திய தேசிய கொடியை பிடித்தபடி பாடிக்கொண்டிருந்தார். பின்னர் அந்தக் கொடிகளை பார்வையாளர்கள் மீது எறிந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து தேசிய கொடியை அவமதித்ததாக, தானாஜி தேஷ்முக் என்பவர் நாக்பூர் மாவட்டத்தில் முந்த்வா போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT