Published : 14 Aug 2023 10:02 AM
Last Updated : 14 Aug 2023 10:02 AM

சூர்யா நடிப்பில் தனி படமாக உருவாகும் ரோலக்ஸ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம், ‘விக்ரம்’. இதில், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், காயத்ரி, காளிதாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் வரவேற்பைப் பெற்றது.

இந் நிலையில், ரோலக்ஸ் கேரக்டரை வைத்து தனி திரைப்படம் உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா, சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். அப்போது தனது அடுத்த படங்கள் குறித்து கூறியுள்ள அவர், ‘ரோலக்ஸ்’ கேரக்டரை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்கிறார்கள். தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x