Published : 26 Jul 2023 06:18 PM
Last Updated : 26 Jul 2023 06:18 PM

ரூ.10 கோடி பட்ஜெட், ரூ.70 கோடி வசூல்: ஆனந்த் தேவரகொண்டாவின் ‘பேபி’ படத்துக்கு வரவேற்பு

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள ‘பேபி’ தெலுங்கு படம் ரூ.70 கோடி வசூலித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இது கன்டென்ட் ஆதிக்கம் நிறைந்த சிறிய பட்ஜெட் படங்களுக்கான காலம். தமிழில் ‘டாடா’, ‘குட் நைட்’, ‘அயோத்தி’, ‘போர்தொழில்’ என சிறிய பட்ஜெட் படங்கள் ஹிட்டடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றன. தெலுங்கில் வெளியான ‘பேபி’ படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா, விராஜ் அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘பேபி’ வெளியாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், உலக அளவில் மொத்தமாக இதுவரை ரூ.70 கோடி வசூலை குவித்து மிரட்டி வருகிறது.

படத்துக்கான ப்ரோமோஷன் வழியே ஹைப் இருந்தபோதிலும் அந்த எதிர்பார்ப்புக்கு நியாயம் சேர்த்திருந்தது படத்தின் இந்த வசூலுக்கு முக்கிய காரணம் என திரை வர்த்தகர்களால் கணிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டினால் தெலுங்கு சினிமாவின் முக்கியமான மைல்கல்லாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x