Published : 14 Jul 2023 10:52 AM
Last Updated : 14 Jul 2023 10:52 AM

பேய்கள் நடத்தும் கேம் ஷோ - சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: சந்தானம், மொட்ட ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆர்கே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். காமெடி ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த சூழலில் இன்று (ஜூலை 14) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: தமிழில் இத்தனை ஆண்டுகாலம் இந்த ஜானரில் எப்படியான படங்கள் வந்துகொண்டிருந்தனவோ, அதே பாணியில் இம்மி பிசகாமல் இப்படமும் உருவாக்கப்பட்டிருப்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. ஒரு தனித்த பேய் பங்களா, அதில் வேண்டுமென்றே மாட்டிக் கொள்ளும் ஹீரோ மற்றும் குழுவினர், காமெடி பேய்கள், மொட்டை ராஜேந்திரான் என தமிழ் காமெடி ஹாரர் படத்துக்கு தேவையான அத்தனை மூலப் பொருட்களும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த பெரிய பங்களாவில் பேய்கள் நடத்தும் கேம் ஷோவில் ஹீரோ அண்ட் கோ பங்கேற்று ஜெயிப்பதே படத்தின் கதையாக இருக்கலாம். சேர்க்கப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு ஒரு தரமான பிரியாணியை செய்திருக்கிறாரா? இல்லை அதே பழைய மாவை அரைத்திருக்கிறாரா? என்பதை வரும் ஜூலை 28ல் தெரிந்து கொள்ளலாம்.

டிடி ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x