Published : 12 Jul 2023 05:49 AM
Last Updated : 12 Jul 2023 05:49 AM

கமலின் 233-வது படம் விவசாயம் தொடர்பான கதையா?

சென்னை: ‘துணிவு’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார், ஹெச். வினோத். கமலின் 233-வது படம் இது. இந்தப் படத்தின் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன், விவசாயிகளுடன் நடிகர் கமல்ஹாசன், ஹெச்.வினோத் ஆலோசனை செய்தனர். இதனால் இந்தப் படத்தின் கதை, விவசாயம் தொடர்பானது என்று செய்திகள் வெளியானது. ஆனால், இதை ஹெச்.வினோத் மறுத்துள்ளார்.

விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், இதுபற்றி கேட்டபோது, “கமல்ஹாசனுடன் இரண்டு, மூன்று கதைகள் பேசினோம். ஆனால் அவர் சொன்ன கதைகள் சுவாரஸ்யமாக இருந்தது. அதில் ஒரு கதைக்குத் திரைக்கதை எழுதி படமாக்குகிறோம். விவசாயத்தின் மீது எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால், இது விவசாயம் தொடர்பான கதை இல்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x