Published : 11 Jul 2023 11:08 AM
Last Updated : 11 Jul 2023 11:08 AM
சென்னை: நடிகர் யோகி பாபு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு அணியின் கேப்டன் தோனி வசம் வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு தோனியும் பதில் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது படத்தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக எல்.ஜி.எம் என்ற தமிழ் படத்தை தயாரித்துள்ளார். இதில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை, லீலா பேலஸில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோனி, அவரது மனைவி சாக்ஷி தோனி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். இதில் பேசிய யோகி பாபு, படத்தை குறித்து பேசினார். தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு தோனி வசம் வேடிக்கையாக கேட்டார். அவர் கிரிக்கெட் விளையாட்டு பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ராயுடு ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் சிஎஸ்கே அணியில் உங்களுக்கான இடம் உள்ளது. நான் அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறீர்கள். நான் சொல்கிறேன். நீங்கள் கன்சிஸ்டியுடன் விளையாட வேண்டும். உங்களை காயப்படுத்தும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்தை வேகமாக வீசுவார்கள்” என தோனி பதில் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT