Published : 08 Jul 2023 06:42 AM
Last Updated : 08 Jul 2023 06:42 AM

வைரலாகும் ‘ஜெயிலர்’ பட பாடல் ‘காவாலா’

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக.10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ நேற்று முன் தினம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x