Published : 05 Jul 2023 07:00 AM
Last Updated : 05 Jul 2023 07:00 AM

விஷால் -ஹரி பட ஷூட்டிங் எப்போது?

சென்னை: நடிகர் விஷால், இயக்குநர் ஹரியுடன் இணையும் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது, வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் வரும் 7-ம் தேதி இந்தப் படத்துக்கான போட்டோஷூட் படப்பிடிப்பு நடக்கிறது. இதையடுத்து வரும் 22-ம் தேதியில் இருந்து சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இப்போது 3 வது முறையாக அவருடன் இணைகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x