Published : 02 Jul 2023 02:06 PM
Last Updated : 02 Jul 2023 02:06 PM

அக்டோபர் மாதம் தொடங்கும் ‘விஜய்68’ படப்பிடிப்பு?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘லியோ’. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x