Published : 26 Jun 2023 03:00 PM
Last Updated : 26 Jun 2023 03:00 PM

10 நாட்கள் கடந்தும் படத்தின் பட்ஜெட்டை நெருங்க முடியாத ‘ஆதிபுருஷ்’ வசூல்

பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.450 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் படத்தில் பட்ஜெட் தொகையையே இப்படம் நெருங்கவில்லை.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படம் வெளியான முதல் நாள் ரூ.140 வசூலானதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் முடிவில் ரூ.340 கோடியை வசூலித்த ‘ஆதிபுருஷ்’ எதிர்மறை விமர்சனங்கள், சர்ச்சைகளால் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கியது. இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.450 கோடி வசூலாகியுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x