Published : 21 Jun 2023 08:03 AM
Last Updated : 21 Jun 2023 08:03 AM

சென்னை விமான நிலையத்தில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தமா?

சென்னை: கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘இந்தியன்'. இதன் 2-ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம், முதல் வாரத்துடன் படப்பிடிப்பு நிறைவுபெறுகிறது. இதற்கிடையே இதன் சில காட்சிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு நடத்துவதற்காக, தயாரிப்பு நிறுவனம் ரூ.1.24 கோடி கட்டணம் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அனுமதியளிக்கப்பட்ட பகுதியை விட்டு பிற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதாகவும் அதற்கு விமான நிலைய அதிகாரிகள் மறுத்ததால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி படக்குழு தரப்பில் விசாரித்தபோது, “விமான நிலையத்தில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளோம். அனுமதி பெறாமல் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த முடியுமா? அங்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x