Published : 17 Jun 2023 01:02 PM
Last Updated : 17 Jun 2023 01:02 PM
சென்னை: மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில், அசுரன் படத்தின் வசனத்தை விஜய் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் மாணவர்களுக்கான மதிய உணவில் செள செளகூட்டு இடம் பெற்று இருந்தது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், "இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். ‘காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது’. அது தான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.
இவ்வாறு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வசனத்தை குறிப்பிட்டு விஜய் பேசினார். இது தவிர்த்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், விடுதலை படத்தில் இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்த செள செள காயால் செய்த கூட்டு இடம் பெற்று இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT