Published : 14 Jun 2023 08:52 AM
Last Updated : 14 Jun 2023 08:52 AM
சென்னை: நடிகை வினோதினி வைத்தியநாதன் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
தமிழில் ‘எங்கேயும் எப்போதும், ‘ஓகே கண்மணி’, ‘அப்பா’, ஜிகிர்தண்டா’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன்.
கூத்துப் பட்டறையின் பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி, ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். ‘ஜிகிர்தண்டா’ படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஐஸ்வர்யா ராயின் தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபகாலமாக ட்விட்டர் சமூக வலைதளங்களில் வினோதினி அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவரது பல்வேறு அரசியல் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பேசுபொருளாகின.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 13) கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் வினோதினி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவுடன் உறுதி செய்துள்ளார்.
கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல… pic.twitter.com/BTtR8dN9SL— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) June 13, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT