Published : 12 Jun 2023 05:39 AM
Last Updated : 12 Jun 2023 05:39 AM

‘லியோ’வில் இணைந்த மடோனா செபாஸ்டியன்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’. அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், இந்தி நடிகர் சஞ்சய் தத், மிஷ்கின் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமான செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை மடோனா செபாஸ்டின் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘பா பாண்டி’, ‘வானம் கொட்டட்டும்’ படங்களில் நடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x