Published : 11 Jun 2023 01:30 PM
Last Updated : 11 Jun 2023 01:30 PM
லூதியானா: நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த பாலிவுட் நடிகர் மங்கள் தில்லான் இன்று காலமானார். அவருக்கு வயது 78.
பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இந்தி டிவி தொடர்களின் மூலம் பிரபலமானவர் மங்கள் தில்லான். 1986ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ மற்றும் 1988ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கூன் பாரி மாங்’ ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர், மீண்டும் 1993ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘ஜுனூன்’ தொடரில் இடம்பெற்றார்.
’பியார் கா தேவ்தா’, ‘ரன்பூமி’, ‘ஸ்வர்க் யஹான் நர்க் யஹான்’, ‘விஷ்வாத்மா’, ‘தில் தேரா ஆஷிக்’, ‘ட்ரெய்ன் டு பாகிஸ்தான்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மங்கள் தில்லான் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்வு தில்லானுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பஞ்சாபில் உள்ள லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக உடல்நிலை மோசமடைவே இன்று (ஜூன் 11) சிகிச்சை பலனின்றி மங்கள் தில்லான் காலமானார். அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Saddened to learn about the demise of noted actor, writer, director and producer of Punjabi cine industry Mr Mangal Dhillon. It’s a big loss to the world of Indian Cinema. His captivating voice and theatrical displays will be missed by many. I extend my heartfelt condolences to… pic.twitter.com/Jh7Oxst9CP
— Sukhbir Singh Badal (@officeofssbadal) June 11, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT