Published : 16 Dec 2017 05:34 PM
Last Updated : 16 Dec 2017 05:34 PM
டிசம்பர் 17 | ரஷ்ய கலாச்சார மையம் | மதியம் 3:00 மணி
தினசரி பேப்பரில், மூணுகால செய்தியாக... ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை சாவு, 36 மணி நேரம் போராடி, சடலமாக மீட்பு என்று வந்திருக்கிற செய்தியை, எத்தனைபேர் முழுதாகப் படித்திருப்போம். அந்தத் துயரத்தை, கலவரத்தை, நடுக்கத்தை, பதட்டத்தை ஒரு ரெண்டு மணி நேர சினிமாவா கன்வர்ட் பண்ண முடியுமா. அப்படியே பண்ணினாலும் பார்க்கமுடியுமா. பண்ண முடியும், பார்க்க முடியும் என நிரூபித்திருக்கிறார் டைரக்டர் கோபி நயினார்.
வானத்தை நோக்கி ராக்கெட்டை விட்டு என்ன... பூமிக்கடியில் விழுந்த குழந்தையை மீட்க ஒரு உபகரணம் கூட கண்டுபிடிக்கவில்லையே என்கிற கோபம்... மீத்தேன் கொடுமை... கபடி விளையாட்டில் கில்லியாக இருந்த அப்பா... நீச்சலில் கரையேறத் துடிக்கிற பையன்... 'எப்போ வாட்டர் பாட்டில் வந்துச்சோ... அப்பலேருந்து தண்ணிப் பிரச்சினையும் தலை தூக்க ஆரம்பிச்சிருச்சு’ என்கிற முகம் அறையும் உண்மை என அறம் பண்ணியிருக்கிறார் இயக்குநர்.
போலீஸ், ஃபயர் சர்வீஸ், தேசியப் பேரிடர் பாதுகாப்பு என சூழ்ந்திருந்தாலும் ஆழ்துளையில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற முடியாத நிலை, ஒரு கவுன்சிலரை காபந்து பண்ணத் துடிக்கிற எம்.எல்.ஏ., மினிஸ்டர்... நல்லது செய்த அதிகாரிக்கு விசாரணை... கடந்த சில வருஷங்களில், இத்தனை அறங்களைச் சுமந்து, அறத்தோடு வந்திருப்பது... அறமாகத்தான் இருக்கும்!
கோபமும் நியாயமும் மனிதாபிமானமும் கொண்டே திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது பளீரிடுகிறது. ஒரு கண்டுபிடிப்பாளனைக் கொண்டாடாத தேசம் எனச் சுட்டிக்காட்டும்போது வலிக்கிறது. அநேகமாக, இந்தப் படத்தில்தான் சேனல்களை நல்லவிதமாகக் காட்டியிருப்பதாக நினைக்கிறேன்.
கதையோடு மட்டுமே சமரசம் செஞ்சு, கதை தாண்டி, சதைப்பக்கம் போகாமல் ஒரு சினிமா. அதுவும் அந்தப் பொட்டல் காட்டு லொகேஷனில் இறங்கி, ஷூட் பண்ணிவிட்டு, கிளம்பி வந்து, படத்தையே ரிலீஸ் பண்ணிவிட்ட தைரியம். அப்பாவா நடித்தவர், அம்மாவாக நடித்தவர்களையெல்லாம் விடுங்கள். அந்த நாலு வயசு தன்ஷிகா, கண்ணுக்குள்ளேயே நிற்கிறாள்.
அய்யய்யோ... குழந்தை பொழச்சுக்கணுமேனு எல்லாரும் அவரவரின் குலசாமியை வேண்டிக்க் கொண்டிருப்பார்கள். அதனால்தான் இயக்கம் கோபி நயினார் என டைட்டில் போடும்போது, செம கைத்தட்டல். மெளத் டாக், இணைய தளம் என எங்கு பார்த்தாலும் ஹிட்டடித்திருக்கிறது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் செம பலம். ரெண்டுபேருக்கும் சபாஷ். ஜிப்ரான் இசை, காட்சி அடர்த்தியை தன் பங்குக்குக் கூட்டியிருக்கிறது.
வேல ராமமுர்த்தி பக்கா அரசியல்வாதி என்றால், கிட்டி பக்கா அதிகாரி. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, மதிவதனியை விட்டுவிட முடியுமா. வாழ்ந்திருக்கிறார். ஒரு கலெக்டர் எப்படித் தெரியுமா இருக்கணும். மதிவதனி மாதிரி இருக்கணும். அதிகாரி இப்படித்தான் இருக்கணும்.
டைரக்டர் கோபி நயினாருக்கு இரண்டு விஷயம்... பிரிச்சு மேய்ஞ்சு, பட்டையக் கெளப்பி, பிரமாண்டப்படுத்தி, பிரமாதம் பண்ணி, அசத்திட்டியேப்பா எனக் கொண்டாடிவிட்டார்கள் ரசிகர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT