Published : 15 Dec 2017 05:37 PM
Last Updated : 15 Dec 2017 05:37 PM
|இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 6:00 மணிக்கு திரையிடப்படவுள்ள ‘8 தோட்டாக்கள்’ படத்தைப் பற்றிய பார்வை|
செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கச் செல்லும் சிறுவனில் இருந்து தொடங்குகிறது கதை. அவன் வளர்ந்து, பிடிக்காத போலீஸ் துறைக்கு வருவதும் அவனுடைய எட்டு தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கிக் காணாமல் போவதும் அதை மீட்டெடுக்கும் பயணமுமாக விரிகிறது திரைக்கதை.
நேர்மையான போலீஸ் ஹீரோவும் அங்கே மாமூல் வாங்கும் இன்ஸ்பெக்டரும் மாமூலான விஷயங்கள்தான். ஆனால் அடுத்தடுத்து நிகழ்கிற கதை உத்திகளும் திரைக்கதை நகாசுகளும்தான் ஆகச் சிறந்த படமாய் நம்மைக் கொண்டாடச் செய்கின்றன.
ஒரு ரவுடியை ஃபாலோ செய்யும் போது, பிக்பாக்கெட் சிறுவன் ஹீரோவின் துப்பாக்கியை ‘லபக்’கிக் கொள்ள, அது ஒவ்வொருவர் கைக்குச் சென்று, எம்.எஸ்.பாஸ்கர் அதை வாங்கிக் கொண்டு, கூடவே இரண்டுபேரையும் வைத்துக் கொண்டு, வங்கியில் கொள்ளையடிப்பதும் அப்போது கையில் உள்ள போலீஸ் துப்பாக்கியால், ஒரு குழந்தையைச் சுடுவதும் கிளப்புகிற பகீர்... கடைசி வரை குறையவே இல்லை.
பாஸ்கருக்கு, அடியாள் தலைவனின் கையாள், தலைவனின் மனைவியுடன் ஓடுவதற்கு, அம்மா, தங்கையைக் காப்பாற்ற கால்டாக்ஸி ஓட்டும் இளைஞன் வெளிநாடு செல்வதற்கு என பணத்தேவைகளை யதார்த்தமாகக் காட்டிய விதம், ஒன்ற வைக்கிறது. அந்த மீடியா ஹீரோயின் அழகு. அழகாய் வந்து போகிறார். துப்பாக்கியைத் தேடிப் புறப்படும் கதையுடன் நம்மையும் தேடுதலுக்கு கூட்டிச் செல்கிறது காமிரா ( )வும் இசையும்!
பாஸ்கரும் நாசரும் படத்தில் குறி தப்பாமல் கேரக்டராகவே மாறியிருக்கிறார்கள். மொத்த தோட்டாக்களையும் எட்டுத் தோட்டாக்களையும் வைத்துக் கொண்டு, கதையின் எட்டுத் திக்கும் சென்று விளாசியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
கெளரவமான... கம்பீரமான படம்.கொண்டாடவேண்டிய படம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT