Published : 16 Mar 2022 10:35 AM
Last Updated : 16 Mar 2022 10:35 AM
நாகப்பட்டினம்: நாகையில் மார்ச் 19-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில், நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் மார்ச் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் , பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, தையல் கலை பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.
முகாமில், சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நாகை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வித் தகுதி குறித்த விவரங்களை முன்பே பதிவு செய்து கொள்ளலாம். முகாமுக்கு வரும்போது, வேலைநாடுநர்கள் சுய விவர குறிப்பு மற்றும் சான்றிதழ்களுடன் வரவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT