Published : 19 Apr 2023 06:34 AM
Last Updated : 19 Apr 2023 06:34 AM
சென்னை: அனைத்து மாவட்ட வேலை வாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் 2 அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து ஏப்ரல் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளன.
இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியிடங்களுக்கு ஆட்களைதேர்வு செய்யவுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in எனும் இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT