Published : 15 Mar 2023 07:21 AM
Last Updated : 15 Mar 2023 07:21 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்தவேலையில்லா இளைஞர்களுக்காக மெகா வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது. வரும் மார்ச் 18-ம் தேதிநடைபெறும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்று வேலைநாடுநர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை, வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுதவிர நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தற்போது இந்த ஆண்டுக்கான மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 18-ம் தேதி (சனிக்கிழமை) வித்யாசாகர் மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. இதனை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
18 முதல் 40 வயது வரை: இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்கலாம். இவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 18-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரைமுகாமில் கலந்துகொண்டு உரியவேலையை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in https://tnprivatejobs.tn.gov.inஇணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவதன் மூலம் தொடர்புடைய நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்துசெய்யப்படமாட்டாது எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT