Published : 09 Mar 2023 06:15 AM
Last Updated : 09 Mar 2023 06:15 AM

தென்காசி | புளியங்குடியில் 11-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 

தென்காசி: புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வருகிற 12-ம் தேதி காலை 8.30 மணியளவில் மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.

முகாமில் எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.

மேலும், அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்துகொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவு அவசியம் என்பதால் https;//tinyurl.com/tenkasi2023 என்ற google form-ல் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் மின்னஞ்சலுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள இருக்கும் வேலை அளிப்போர்கள் விவரம் அறிய https://www.decgctenkasi.com/mega-job-fair-2023 என்ற google link-ஐ பார்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தகவலை தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x