Published : 21 Feb 2023 10:03 PM
Last Updated : 21 Feb 2023 10:03 PM

அக்னி வீரர் பணிக்கு மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்: ராணுவம்

கோப்புப்படம்

புதுடெல்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான அறிவிப்பு கடந்த 15-ந் தேதி வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத ஆடவர்களிடமிருந்து அக்னி வீரர் பொதுப்பணி, அக்னி வீரர் தொழில்நுட்பம், அக்னி வீரர் குமாஸ்தா/ ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னி வீரர் ட்ரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு 16-ம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 15-ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் மாதம் 17-ம் தேதியில் இருந்து நடைபெறவுள்ள ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு நுழைவு சீட்டு ஆன்லைன் மூலம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து www.joinindianarmy.nic.in தளத்தை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். மின்னஞ்சல் முகவரியையும் அளிக்கலாம். மேலும், விவரங்கள் தெரிந்துகொள்ள சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பணி நியமன அலுவலக தொலைபேசி எண்ணான 044-25674924 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

பணிநியமன நடைமுறை முற்றிலும் தானியங்கி வழியில் நியாயமான, வெளிப்படையான முறையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் போலி முகவரிகள், மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். கடின உழைப்பும், முன் தயாரிப்பும், தகுதி அடிப்படையில் தேர்வை உறுதி செய்யும். போலி முகவர்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லாததால் அவர்களை நம்ப வேண்டாம் என விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x